ஆளுனரிடம் பாஜக மனு!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜகவினர் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரி மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில், “அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும்.” பாஜகவின் மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். ஆளுனர் இம்மனு மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.