ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்!

Filed under: சென்னை |

அமைச்சர் நாசர் விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

“ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும். மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.” இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.