ஆஸி., தொடரை இந்தியா வெல்லும்: லட்சுமண் கணிப்பு

Filed under: விளையாட்டு |

f8076bbb-0cd9-4272-b2b8-2494cbaf434eHiResபுதுடில்லி:””ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றும், என, முன்னாள் வீரர் லட்சுமண் கணித்துள்ளார்.

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச “டுவென்டி-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. “டுவென்டி-20 போட்டி வரும் அக்., 10ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேயில் அக்., 13ல் நடக்கிறது.

இத்தொடர் குறித்து, முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய உள்ளனர். இத்தொடர், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த உதவும்.

யுவராஜ் சிங், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இவரை போன்ற திறமையான வீரர்களுக்கு, நீண்ட நாட்கள் அணியில் இடம் கொடுக்காமல் இருக்க முடியாது. முந்தைய போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரது செயல்பாடு முக்கிய பங்குவகித்தன. சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் “ஏ மற்றும் சாலஞ்சர்ஸ் டிராபி தொடரில் திறமையை நிரூபித்ததன் மூலம், எளிதாக அணியில் இடம் பிடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.