இந்த அணிதான் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா வீரர் பீரெட் லீ!

Filed under: விளையாட்டு |

ஐபிஎல் போட்டி இதுவரை 12 முறை நடந்துள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு 13 வது சீசன் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி எது என்று அனைவரிடமும் கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை யென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் தான் கூறுவார்கள். ஆனால், இந்த தடவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் கூறியது: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். இதனால் சென்னை அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே அணியின் வீரர்கள் வயதானவர்கள் இருப்பதுதான். இளைஞர்களும் அணியில் இருக்கின்றனர். ஆனாலும்,பல ஆண்டு கிரிக்கெட்டில் விளையாடிய வயதான வீரர்கள்தான் இருப்பது மிகப்பெரிய பலம்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை 40 டிகிரி வரை இருக்கும். இதனால் பந்து சிறப்பாக டர்ன் ஆகும். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்றொரு ஹோம் மைதானம் போல இருக்கும். சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்தை டர்ன் செய்வார்கள். இதனால் சென்னை அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பிரட் லீ தெரிவித்துள்ளார்.