இசையமைப்பாளர் தமனின் டுவிட்!

Filed under: சினிமா |

இசையமைப்பாளர் தமன் “வாரிசு” திரைப்படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-’’ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வாரிசு.” இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த “வாரிசு” திரைப்பட இசையமைப்பாளர் தமன், “வாரிசு” படத்தின் எமோசன் காட்சிகளைப் பார்த்து இதயத்தில் இருந்து அழுததாகவும், இந்த அற்புத வாய்ப்புக்கு நன்றி. கண்ணீர் விலைமதிப்பற்றது” என்று கூறியுள்ளார். நாளை “வாரிசு” திரைப்படம் வெளியாகவுள்ளதால், தமனி விமர்சனமும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.