இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

Filed under: சென்னை |

முத்தமிழ் பேரவையின் 41ம் ஆண்டு இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கலந்து கொள்ளும் முதல் இசை விழா நிகழ்ச்சி இது. விழாவில் பல்வேறு தரப்பு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டதுதான் இந்த முத்தமிழ் பேரவை அமைப்பு. பல்வேறு சங்கடங்களுக்கு இடையில் முத்தமிழ் பேரவை நல்லவிதமாக அமிர்தம் அவர்களால் செயல்பட்டு வருகிறது. மக்கள் எல்லோருடைய தோளோடு தோளாகவே இருக்கவே விரும்புகிறேன். இசையானது பல பரிமாணங்களை அடைந்துள்ளது. மக்களுக்காக கலைகள் இருக்க வேண்டும், கலையில் மூட நம்பிக்கைகளை விதைக்க கூடாது. இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். எனது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் “ஜெய்மீம்“ முதல்வர். படம் பார்த்துவிட்டு 2 நாட்கள் தூங்கவில்லை. சிறைச்சாலை கொடுமைகளை அனுபவித்தவன் நான்.” என்று பேசினார். விழாவில் விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டி பேசினார்.
விருது பெற்றவர்களின் விபரம் வருமாறு:
இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு “இயல் செல்வம்” விருதும், ராஜ்குமார் பாரதிக்கு “இசை செல்வம்” விருதும், பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் சுபானி – பத்மஸ்ரீ காலிஷாபி மெஹபூப் ஆகிய இருவருக்கும் “ராஜ ரத்னா” விருதும், நாட்யாச்சார்யா பத்மபூஷன் வி.பி.தனஞ்சயன் – பத்மபூஷன் சாந்தா தனஞ்சயன் ஆகிய இருவருக்கும் “நாட்டிய செல்வம்” விருதும், நாகேஷ் ஏ.பப்பநாடு – “நாதஸ்வர செல்வம்“ விருதும், திருராமேஸ்வரம் பா.ராதாகிருஷ்ணனுக்கு “தவில் செல்வம்” விருதும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பெருமக்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.