இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னையில் 4 வது நாளாக தமிழ் நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரிரியர்கள் கூறினர். தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பேச்சு வார்த்தையின் போது இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.