இந்தியாவின் கொரோனா நிலவரம்!

Filed under: இந்தியா |

மெல்ல மெல்ல அதிகரிக்க கொரோனா பாதிப்பு. கடந்த சில நாட்களாக அதிகரித்து இப்போது மீண்டும் குறைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா நிலவரம் பதியப்பட்டது. தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் தற்போது மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்புகள் 4,31,53,043 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,586 ஆகும். மொத்தம் குணமடைந்தவர்கள் 4,26,11,370 ஆகும். இந்நிலையில் 17,087 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.