“இந்தியாவில் இந்துக்கள் வாழவே முடியாது!”

Filed under: அரசியல்,இந்தியா |

காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டில்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிண்டால், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் சர்மாவும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது.

தற்போது ராஜஸ்தானின் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மீண்டும் நாடு முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் நுபூர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்தான் இந்த பதட்டத்திற்கு காரணம். உதய்ப்பூர் நகரின் மால்தாஸ் பகுதியில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்குள் திடீரென புகுந்த இரண்டு பேர் கண்ணயலாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இச்சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கண்ணையா லால் கருத்து வெளியிட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதய்பூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி “இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் “இந்துஸ்தானில் உண்மையான இந்துக்களால் வாழவே முடியாது என்ற சூழல் உருவாகி வருகிறது. அப்படி வாழ வேண்டுமென்றால் அவர் நகர்ப்புற நக்கலாக இருக்க வேண்டும். அல்லது இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவர் இறந்திருக்க வேண்டும். தற்போது ராஜஸ்தானில் திகழ்ந்த கொலைக்காக இந்தியாவிடம் கத்தார் நாடு மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு மனிதனை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஜிகாதிகள் அந்த வீடியோவையும் வெளியிடுகின்றனர். கடவுளின் பெயரால்… என கோஷமிட்டப்படி அவர்கள் அந்த மனிதரை கொலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.