இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா முடிவுக்கு வரும் – ஆய்வு முடிவுகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா முடிவுக்கு வரும் – ஆய்வு முடிவுகள்!

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று மட்டும் 10,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தொட்டு. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலி மற்றும் ஸ்பெயினை முந்திக்கொண்டு 5ம் இடத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் செப்டம்பரில் முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சகத்தின் நிபுணர்கள் இருவர் கணித்துள்ளனர். இது சம்மந்தமாக கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையுடன், இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் சமநிலையை அடையும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் என அவர்கள் கணித்துள்ளனர். இந்த செய்தி இந்திய மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.