இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா?

Filed under: இந்தியா |

தற்போது வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு நாட்களில் துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 9500க்கும் அதிகமானவர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது குஜராத் உள்ளிட்ட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குஜராத், பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் டில்லி, என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து இருப்பதாகவும் இந்தியாவின் 59% நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.