இந்தியாவில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று

Filed under: இந்தியா |

புதுடெல்லி, அக் 1:
நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,727 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,727 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது.

28,246 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,30,43,144 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில், 277 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 4,48,339 ஆக உயர்ந்துள்ளது. 2,75,224 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த, 24 மணி நேரத்தில், 64,40,451 தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன; இதுவரை, 89,02,08,007 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.