இந்தியாவில் 29,616 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 25:

நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்:

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,046 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், 290 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,28,76,319 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 4,46,658 ஆக உயர்ந்துள்ளது. 3,01,442 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த, 24 மணி நேரத்தில், 71,04,051 தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன; இதுவரை, 84,89,29,160 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.