இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

Filed under: உலகம் |

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விழுந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் யார் யார் பயணம் செய்தார்கள்? அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும், விபத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை இனிமேல்தான் ராணுவம் திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்த சம்பவம் இந்திய ராணுவத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.