கொரோனா தடுப்பு மருந்து பற்றி விரைவில் நல்ல செய்தி வெளிவரும் – அதிபர் டிரம்ப்!

Filed under: உலகம் |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைப்பற்றி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது: ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் பெரிய அளவில் கொரோனா பரிசோதனை திட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் குறைந்த பிறப்பு விகிதம் மட்டுமே உள்ளது. பின்னர் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் பரிசோதனை திட்டம் விரிவாக உள்ளது. இதுவரை 4.5 கோடி பரிசோதனைகள் செய்து இருக்கிறோம்.

கொரோனா தடுப்பூசிகளை சிறப்பாக தயாரித்து வருகிறோம். இதற்கான சிகிச்சைகளை நன்றாக செய்து வருகிறோம். இதனைப் பற்றி விரைவில் நல்ல தகவல் வெளிவரப் போகின்றது என நான் எதிர்பார்கிறேன். சீனா நாடு உலகத்துக்குச் செய்த கொடுமைகளை மறக்கக்கூடாது

இவ்வாறு அவர் கூறினார்.