இந்திய விமானப் படையின் சீட்டா ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கம்

Filed under: இந்தியா |

கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் லே பகுதியில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துக்கொண்டு இந்திய விமானப்படையின் சீட்டா ஹெலிகாப்டர் ஹின்டோனில் இருந்து சண்டீகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஹின்டோனில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் வெளிவட்டச்சாலை நெடுஞ்சாலையில் அந்த ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானிகள் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளனர். பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஹின்டோனில் இருந்து ஹெலிகாப்டரை மீட்பதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டன. பழுது நீக்கம் செய்து, முறையாக, பாதுகாப்பாக ஹின்டோனில் இருந்து ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.