சடுகுடு ஆடும் இந்திய அரசியல்!

Filed under: அரசியல்,இந்தியா |

delhi-india-gate1இந்தியாவை ஆட்டிப்படைக்கம் நேரு குடும்பத்தின் வாரிசு, தற்போது அரசியல் தேர்ச்சி பெறாமல் உதிர்த்துள்ள கருத்துக்கள் வடமாநில மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாம். முஸ்லீம் வாக்குகளுக்காக இந்திய பகுதிகளை தியாகம் செய்ய தயாராக உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தியின் முஸ்லீம்கள் பற்றிய தேவையற்ற கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். இந்துமத உணர்வுகளை புறக்கணித்து, இந்திய கலாச்சார பண்புகளை ஒதுக்கி, முஸ்லீம் ஓட்டுவங்கிக்காக மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் அரசியல் நாடகம் நடத்திய கபடதாரிகளுக்கு இந்திய மக்கள் ஒருங்கிணைந்து ரிவிட் அடிக்கத் தயாராக உள்ளார்களாம்.
மேலும் சாதிகளை பிரித்து, சாதிகளின் ஆதிக்கத்தை வெறி ஏற்றி, அரசியல் லாபம் கண்ட இந்திய கட்சிகளுக்கு உச்சநீதி மன்றம் ஆப்பு அடித்துள்ளதாம். எந்தஒரு அரசியல்கட்சியும் சாதியின் பெயரால் இனி ஊர்வலம் மற்றும் பிரச்சார கூட்டங்கள் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாம். இந்திய முஸ்லீம்களின் அதிக கவனம் நரேந்திரமோடி மற்றும் புரட்சித்தலைவி மீது படர்ந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வின் கை ஓங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வெங்காய வெடியால் அதிர்ந்து போயுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வெங்காயத்தை வைத்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ், அதே வெங்காயத்தால் ஆட்சியை இழக்கிறதாம். ராஜஸ்தானில் வசுந்தராராஜா சிந்தியா மறுபடி முதல்வர் ஆகிறார். மத்திய அமைச்சர் பி.சி.ஜோஷி, முதல்வர் அசோக்கெல்லட் இருவரின் வறட்டு கௌரவம் மற்றும் உட்கட்சி சண்டை ராஜஸ்தான் காங்கிரசை பிளந்து விட்டது. மேலும் ராஜஸ்தான் அரசின் நிர்வாகத்திறமையின்மை, ராகுல்காந்தி தற்போதைய முதல்வருக்கு ஒத்துழையாமை காங்கிரஸ் ஆதரவை அதிகம் குறைத்து விட்டதாம். மத்திய பிரதேச பா.ஜ.க. தற்போது தள்ளாட்டத்தில் உள்ளதாம். முதல்வர் சௌகானும், அவரது மனைவியும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்ட அரசியல் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை ஆட்டி வைத்துள்ளதாம்.
மேலும் அத்வானி, மோடி ஆதரவாளர்களிடையே தற்போது பிளவு உண்டாகி இருப்பதாக மத்திய பிரதேச அரசியல் வட்டாரம் கூறுகிறது. காரணம் மத்திய பிரதேச முதல்வர் அத்வானியின் தீவிர ஆதரவாளர். காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர். நிர்வாகத்திறமை தெரிந்த இளமையான மத்திய அமைச்சர். தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் கை ஓங்கி இருப்பதாக கூறுகிறார்கள். சத்தீஸ்கர் மாநில முதல்வர் அமைதியான அரசியல் நடத்துபவர். தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாவிட்டாலும் தடுக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டவராக கூறுகிறார்கள். இவரது ஆட்சியில் பா.ஜ.க. ஒருங்கிணைந்து செயல்படுகிறதாம். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் தீவிர எதிர்ப்பால் திணறுகிறதாம். அஜித்ஜோகி பழங்குடி கிறிஸ்தவர். இவரது பிடிப்பு பழங்குடி வம்சத்தினர் இடையே ஒதுங்கி இருக்கிறதாம். இவரது எதிர்ப்பு சத்திஸ்கர் மாநில காங்கிரசை பிளந்து விட்டது. மிசோராம் மாநிலம் காங்கிரசாரின் ஆதரவு பெற்றது. மீண்டும் இங்கு காங்கிரசின் ஆட்சி ஏற்படும்.
இலங்கை அதிபர் தமிழக சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவு, மத்திய காங்கிரஸ் தலைமையின் ஆதரவு மற்றும் கறைபடிந்த அதிகாரிகளின் துரோகத்தாலும், தமிழக அறிவு ஜீவிகளின் நட்பாலும் தமிழக முதல்வரையும், தமிழக மக்களையும் பயமுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினாராம். சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ பயிற்சியைப் பெற்று தமிழக கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை வீரர்களை அனுப்பி பயமுறுத்த தொடங்கியது.
இதை நம்முடைய நெற்றிக்கண் பத்திரிகை குடும்பத்தினர் எற்கனவே கடந்த இதழ்களில் எச்சரித்தோம். அதற்கு முத்தாய்ப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் இலங்கை அதிபர் அனுமதிபெற்ற ஆயுதங்களுடன் வந்த கப்பலை இந்திய மற்றும் தமிழக அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்தக்கப்பல் தமிழகத்தை தாக்க வந்திருக்கலாம் என்ற பார்வையில் புலன்விசாரணையில் தெரிய வந்துள்ளதாக செவி வழிச்செய்தி கூறுகின்றன.
இதனால் உஷாரான காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், தற்போது இலங்கை அதிபரை குறைகூற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் தமிழக அறிவு ஜீவிகள் தமிழக மக்கள் தாக்கப்பட்டாலும் சரி, இலங்கை அதிபரின் முயற்சிக்கு ஆதரவு தருபவராக காட்சி அளிக்கிறார்களாம். உண்மையில் தமிழக முதல்வரின் இந்திய அரசியல் எழுச்சி பல தடைகளை வென்று இலங்கையை தன்கீழ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்பதே உண்மை.