இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் இந்தி எதிர்ப்பு வசனம் இடம்பெற்றுள்ளது. அந்த வசனத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விஜய் ஒரு வசனம் பேசுகிறார்.
இந்த வசனத்தின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தி மொழி பல ஆண்டுகளாக எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் விஜய் பேசிய இந்த வசனம் ரசிகர்களுக்காக எழுதப்பட்டதா, அல்லது இயல்பாகவே பேசியதா என்பதை படக்குழுவினர்கள்தான் சொல்ல வேண்டும்.