இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி

Filed under: தமிழகம் |

அமைச்சர் சக்கரவாணி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி கைரேகைக்கு பதில் கண் கருவிழி கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசியபோது, “தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்” என கூறினார்.