இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது எடுக்க போகும் முக்கிய முடிவுகள் என்ன?

Filed under: அரசியல் |

இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது எடுக்க போகும் முக்கிய முடிவுகள் என்ன?

 அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 8.50 மணிக்கு கூடுகிறது.
கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள்.

பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.
வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு’ -வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் கொடுத்த நிலையில் அவர் வெளியே வரும்போது அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறலாம் என கூறப்படுவதால் இன்றைய பொதுக்குழு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.