தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அதிமுகவின் சார்பில் முதலவர் வேட்பாளர் யார்? என்கிற பதவி போட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நிலவி வருகிறது.

இந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.