இன்ஸ்டாகிராமில் புது அறிமுகம்!

Filed under: உலகம் |

பணம் அனுப்புவதற்காக பல முறைகள் கையாளப்பட்டு வருகிறது. வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம்.

இனி வரும் காலங்களில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளின் மூலமாக மட்டுமே பண மாற்றம் செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வகையில் ஜிபே, போன் பே, வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்கள் மூலம் பணம் அனுப்பலாம். இன்ஸ்டாகிராமில் பர்சேஸ் செய்யும் பொருட்களுக்கு நேரடி மெசேஜ் மூலம் கட்டணம் செலுத்தும் புதிய அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.