இன்ஸ்டா அக்கவுன்ட்டை டெலிட் செய்த யுவன்!

Filed under: சினிமா |

‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் வெளியானது. விஜய் பாடிய இப்பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் அனிருத் இசையமைத்திருந்தால் பாடல் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இப்பாடல் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தார். அதில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தத்தையடுத்து யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.