இதழியல் புலனாய்வில்
இருபது ஆண்டுகள்…
எல்லோரும் வியக்கும்
இமாலய சாதனை!
ஏ.எஸ். மணியென்னும்
இரும்பு மனிதனின்
இரத்தமும், வியர்வையும்
கலந்த கலவை மொழியிது!
அடக்க நினைத்த ஆட்சியாளர்கள்
அடிக்க துடித்த அரசியலாளர்கள்
முடக்க விரைந்த கெடுமதியாளர்கள்
மூர்க்கம் நிகழ்த்திய கொடுங்கோலர்கள்!
கைது, வழக்கு, சிறைகள்…
கர்ண -கொடூர சித்ரவதைகள்
காலாபானி சிறையில் நடந்தவை
கண்முன் நடந்த காலக்கொடுமை!
சதிவலைகளின் சாகச சிரிப்பில்
உரிமையாளர் கைது ஓகே…
உறவுகள் சுமந்த கொடுமைகள் கண்டு
இரும்பு விலங்கும் இளகி அழுததே!
புழல் சிறையில் முதல்நாள்
புது ஏசி அறையில் மறுநாள்
புத்தகம் பற்றிய சிந்தனையோடே
புடமேறிய பொன் ஏ.எஸ்.மணி!
இத்தனைக் கொடுமையும் துன்பமும்
வேறு இதழ்களுக்குமென்றால்
மாவீரப் பிரதானிகளே
மண்டியிட்டு மன்னிப்பும் கேட்பார்!
இது, திரிபுரம் எரித்த
சிவனின் முக்கண்!
வாழையடி வாழையாய்
வரலாற்றுப் பேழையாய்
எதிர்காலம் முழுமையும்
இதழியலில் ஜொலிக்கட்டும்!
– அ. சேகரண்ணன்,
நெற்றிக்கண் வாசகர் பேரவை
திருநெல்வேலி மாவட்டம்.