இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குனர் ராம் இயக்கப் போகும் புதிய திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்டத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் டைட்டில் “ஏழுகடல் ஏழுமலை” என்று அறிவிக்கப்பட்டு கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு வருகிறது. படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கான காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் உள்ளதாம். இப்போது அந்த கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்துக்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.