ஓடிடியில் “பேட்டைக்காளி” வெப் தொடர் பிரபலமான ஓடிடிக்காக வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக “வாடிவாசல்” திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து “பேட்டைக்காளி” என்ற வெப் தொடரை ஆஹா ஓடிடிக்காக தயாரிக்கவுள்ளார். இத்தொடரை ராஜ்குமார் இயக்க, கிஷோர் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.