கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். திடீரென அப்படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். ஆனால் இப்போது தெலுங்கு சினிமாவில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவேளையைப் பயன்படுத்திக் கொண்டு ஷங்கர் தற்போது உடனடியாக “இந்தியன் 2” திரைப்படத்தைத் தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் விரைவில் “இந்தியன் 2” திரைப்படத்தின் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.