இலவச மின்சாரமும் கேள்விக்குறியே?

Filed under: அரசியல் |

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 100 யூனிட் இலவச மின்சாரமும் இனி கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார்.

மின்சார கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மின்சார கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.பி.உதயகுமார், “மின்சார கட்டண உயர்வு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் வியாபாரிகள் தொழில் முதலீட்டாளர்கள் இதனால் பெரும் பாதிக்கப்படுவார்கள். இனி வருடத்துக்கு 6 சதவீதம் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று சூசகமாக சொல்லப்பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் மீது அரசு ஏற்று உள்ள பெரும் சுமை” என்று அவர் கூறியுள்ளார்.