ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

Filed under: சென்னை |

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இளையராஜாவின் ஜாதி குறித்த சர்ச்சைக்கிடமான பேச்சால் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்தார். அதாவது, “தபேலா எடுத்தவனெல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது, பணமும் புகழும் வந்துவிட்டால் உயர்ந்த ஜாதி ஆகிவிட முடியாது” என்றும் பேசியுள்ளார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசி உள்ளதாகவும் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி கலவரம் தூண்டக்கூடிய வகையில் பேசியதாகவும், அவரை எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்த புகாரை சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.