ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையேயான போர் 150 நாட்களை நெருங்கி உள்ளது.
சிறிய நாடான உக்ரைன் மீது மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர்தொடுத்து பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான போரிலிருந்து பின்வாங்கவில்லை. போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள் 5,110 உயிரிழந்துள்ளனர். 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்யா பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.