உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்!

Filed under: அரசியல் |

உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு குறித்து விளக்கமளிக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இம்மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதிமுக உட்கட்சி குழப்பம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்திற்கு முறையான பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.