தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 5 லட்சம் கோவாக்சின் மற்றும் ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் இன்று அறிமுகம் ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களம்...
அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது.
உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ...
இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தரின் சூப்பர் அல்வா!!!



