உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த சூரி!

Filed under: அரசியல்,சினிமா,சென்னை |

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்ததால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்தனர். அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அவ்வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்’ என பதிவு செய்துள்ளார்.