உதயநிதியை பாராட்டிய அன்பில் மகேஷ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துணை முதலமைச்சருக்கு நிகராக உதயநிதி செயல்படுகிறார்- என்று பாராட்டியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது. ஓராண்டிற்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி கடந்த 14ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்றார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறிய நிலையில் தன் பணியைத் திறம்பட செய்து வருவதாக மூத்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பேசும்போது, “அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சருக்கு நிகரான வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.