உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா..? மு. க ஸ்டாலின் அதிரடி தகவல்

Filed under: அரசியல்,தமிழகம் |

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடைய தாத்தா போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி அல்லது திருவாரூர் தொகுதியிலோ போட்டியிடுவார் என்றும் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், “திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகிறார்கள்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.