அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம் – சீனா தகவல்!

Filed under: உலகம் |

அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டை சீனா என நிராகரிக்கிறது என சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலையிடுவதற்கு முயற்சி செய்வதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் வில்லியம் இவானினா சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இதை பற்றி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியது: அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அந்நாட்டின் விவகாரம், இதில் சீனா எப்போதும் தலையிடாது எனவும் மற்றும் சீனாவிற்கு விருப்பம் எனவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பிரச்சனையால் அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.