உத்தரகாண்டில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா!

Filed under: இந்தியா |

ஹரித்துவாரிலுள்ள சிறைச்சாலையில் 40 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா 4 வது அலை விரைவில் வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரிலிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில், ஒரு கைதிக்கு தொடர் காய்ச்சல் நிலவியது. இதையடுத்து. மற்ற சிறைக் கைதிகளைப் பரிசோதனை செய்ததில், மொத்தம் 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது. கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளனர்.