உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம்

Filed under: உலகம் |

உலக குத்து சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கணை நிகாத் சரீன்.

துருக்கி நாட்டில் இஸ்ததன்புல் நகரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தைச் சேர்ந்த நிகாத் சரீன் இறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

52 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5&0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார்.