சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா கொடியை ஒளிரவிட்ட கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி!

Filed under: உலகம் |

உலகின் இயற்கை அம்சங்களில் ஒன்றான கனடாவின் நயாகரா நீர்விழ்ச்சியில் வருடம் முழுவதும் இரவு சமயத்தில் ஒளிக்காட்சி நடைபெறும். அந்த அருவி மீது பல நிறங்கள் கொண்ட ஒளியை ஒளிரவிடப்படும். அது கண்ணை கவரும் ஒளியை இருக்கும். இதை போல் குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என பல காலங்கள் ஏற்றவாறு நடைபெறும்.

நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரவு 10 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தை கொண்டு ஒளிக்காட்சி செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை கனடாவில் இருக்கும் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கார் அணிவகுப்பு மற்றும் இந்திய வம்சாவளியினர் இருக்கும் பல இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றி கொண்டாடினர்.

இந்தியா சுதந்திர தினத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய வம்சாவளியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.