உலக நாடுகள் பலவும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள எபோலா வைரஸினால் அதிர்ச்சி உள்ளாகி இருக்கிறது.
கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் தற்போது எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலால் 2,300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவின் வடமேற்கு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள தான்சானியா நாட்டில் எபோலாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் இன்னும் மீளாத சூழலில் மீண்டும் எபோலா பரவல் தீவிரமடைவது ஆப்பிரிக்க நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.