சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பின்பு 25 லட்சத்துக்கும் மேலானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இதுவரை 5 இலட்சத்து 87 ஆயிரத்து 948 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 74 ஆயிரத்து 553 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரத்தில் 15 சதவீதம் பரவல் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குழந்தைகளிடம் பெருமளவில் பாதிப்பு அதிகரிப்பதை காணப்படுகிறது.