கொரோனா வைரஸை வென்றுள்ள ஒன்பது நாடுகள்!

Filed under: உலகம் |

நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன், ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா இந்த ஒன்பது நாடுகளும் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளன.

நியூசிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியது. இதனால் ஏழு வாரங்கள் அமலில் இருந்த ஊரடங்கு தற்போது ரத்து செய்தன.

இதை போலவே ஆப்பிரிக்க நாடு தான்சானியாவில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா இல்லாத நாடாக உள்ளது என அதிபர் ஜான் மகுபூலி தெரிவித்துள்ளார்.

சிறிய நாடான வாடிகனில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் குணமடைந்ததை தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி கொரோனா இல்லாத நாடாக மாறியது.

தென் பசிபிக் தீவான பிஜியில் 18 பேர் மட்டும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அனைவரும் குணம் அடைந்துள்ளனர் என பிரதமர் பிராங் பைனிமாரமா தெரிவித்தார்.

இதை போல மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளுக்கும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.