ஊரடங்கு தொடர்பாக பிரதமரின் அறிவிப்பினையொட்டி முதல்வர் எடப்பாடி ஆலோசனை !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : ஊரடங்கு தொடர்பாக பாரதப் பிரதமரின் அறிவிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள் குறித்து தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (15.4.2020) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், முதலமைச்சரின் செயலாளர்கள் முனைவர் எம். சாய்குமார், முனைவர் எஸ். விஜயகுமார், முனைவர் பி. செந்தில் குமார், திருமதி ஜெயஸ்ரீ முரளீதரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.