ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 29:
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த, 1991 -96 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் பதவியில் இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதாக கூறி, இவரது கணவர் பாபு, அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபு மற்றும் சண்முகம் என்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கும், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, தற்போது திமுகவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.