எடப்பாடி பழனிசாமி திமுக மீது குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கோடையில் மின்வெட்டு என்பது ஒரு முக்கிய பிரச்னைகளில் ஒன்று. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது, “செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். முறை வைத்து தான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.