எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடர் முழுவதுமே எதிர்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

லண்டன் நகரில் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாஜக எம்பிகளும், அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக தினந்தோறும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.