என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

Filed under: Uncategory |

என்ன அழகு. என்ன அழகு அழகு ரம்மியமாக காட்சி அளித்த தஞ்சை பெரிய கோயில் !

தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது .

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் எரிய வைக்கும் பணியானது 10 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. கோவிலைச் சுற்றி உள்ள சன்னதிகள் ,விமான கோபுரங்கள் போன்ற பல இடங்களில் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் மகாபலிபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோயில்கள் ,பாறை சிற்பங்கள் போன்ற இடங்களில் மின்னொளி விளக்குகளால் எரிந்து ரம்மியமாக காட்சி அளிப்பது போலவே, இக்கோவிலும் செயல்படுத்தப்பட உள்ளன.


இதற்கான சோதனை கடந்த இரண்டு நாட்களாக விளக்குகளை எரிய வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிந்ததும் வருகின்ற 11ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று மின்னொளி விளக்குகள் இரவு நேரங்களில் எரிய விடப்பட்டு கோவிலின் அழகை மக்கள் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்தனர்.