திருப்பதி தேவஸ்தான கோயில் ஊழியர் கொரோனாவால் பாதிப்பு – நடை மூடல்!

Filed under: இந்தியா |

திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது.

பின்னர் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலை நடந்து வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை நடையை திறப்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.