எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

Filed under: இந்தியா |

முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு கொலை முயற்சி செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் எம்பியாக உள்ள முகமது பைசல், அங்கு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் பிஎம் சையீதியின் மருமகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது சாலி என்பவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, இவ்வழக்கின் தீர்ப்பில், முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்படும் என முகமது பைசல் தெரிவித்துள்ளார்.