பிரபல கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ். இவருக்கு 90 வயது ஆகிறது. இவர் 1930ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் ஹரியானாவில் பிறந்தார். இவரின் 80 ஆண்டுகாள இசை வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். பண்டிட் ஜஸ்ராஜ் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் இருக்கும் அவருடைய மகளின் வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/pandit.jpg)
இவருடைய இந்த மறைகவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; பண்டிட் ஜஸ்ராஜ் ஜி-யின் துரதிர்ஷ்டவசமான மறைவு இந்திய கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. அவரது விளக்கக்காட்சிகள் மிகச்சிறந்தவை மட்டுமல்லாமல், பல பாடகர்களுக்கு ஒரு விதிவிலக்கு வழிகாட்டியாகவும் மற்றும் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.